முக்கிய பயண அறிவிப்பு

2026 ஜூலை 26 முதல் அமலுக்கு வரும் வகையில், சுற்றுலாவுக்காக இலங்கை வரும் தகுதியுடைய அனைத்து பயணிகளும் வருகைக்கு முன்னர் மின்னணு பயண அனுமதியை (ETA) கண்டிப்பாக பெற வேண்டும்.

ஜப்பான் உட்பட தகுதியுடைய 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு 30 நாட்களுக்கான இலவச சுற்றுலா ETA வழங்கப்பட்டாலும், முன்னதாகவே இணையவழி (ஆன்லைன்) மூலமாக ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். 

அதிகாரப்பூர்வ ETA இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கவும்:

https://eta.gov.lk/slvisa/

1 / 2

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය, ජපානය

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம், ஜப்பான்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka, Japan

Embassy Flag

Ambassador Visits Shodoshima Island and Attends Annual Religious Ceremony

2026 நவம்பர் 15 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கௌரவ பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், ககாவா மாகாணத்தில் உள்ள ஷோடோஷிமா தீவுக்கு விஜயம் செய்தார். அங்குள்ள டைஹொன்சான் ஷோடோஷிமா டைகன்னோன் புஷி விகாரையில் நடைபெற்ற வருடாந்த பிரதான சடங்குகளிலும் சமய வழிபாட்டிலும் அவர் கலந்துகொண்டார்.

இந்த விகாரைக்கு இலங்கையுடன் நீண்டகாலமாக நிலவிவரும் உறவையும், கண்டி தலதா மாளிகையுடன் அதற்கு உள்ள வலுவான தொடர்பையும், அதன் ஒத்த கட்டடக்கலை வடிவமைப்பையும் தூதுவர் சிறப்பாக எடுத்துரைத்தார். ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதம சங்கநாயக்கரும், பெல்பொல விபஸ்ஸி அறக்கட்டளையின் நிறுவுநருமான வணக்கத்துக்குரிய பெல்பொல விபஸ்ஸி தேரர் அவர்கள் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தார்

Content image
Content image
Content image
Content image
Content image
Content image