ஜப்பான் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, 2026 நவம்பர் 01 ஆம் திகதி சிபா மாகாணத்திலுள்ள சவார லங்காஜி விகாரையில் நடைபெற்ற வருடாந்த கதினா வஸ்திர தானம் பூசை நிகழ்வில் கலந்துகொண்டார்.
இச்சமய நிகழ்விற்கு விகாரையின் விகாராதிபதியும் ஜப்பானுக்கான தலைமைச் சங்கநாயகருமான அதி வணக்கத்திற்குரிய பனகல உபதிஸ்ஸ நாயக்க தேரர் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் ஜப்பானில் வாழும் பெருந்திரளான இலங்கை பக்தர்கள் பாரம்பரிய கதினா வஸ்திர ஊர்வலம், சங்கிக தானம் மற்றும் இலவச உபசரிப்பு உள்ளிட்ட மத அனுஷ்டானங்களில் பங்கேற்று இச்சிறப்புமிக்க நிகழ்வைக் சிறப்பித்தனர்.
