முக்கிய பயண அறிவிப்பு

2026 ஜூலை 26 முதல் அமலுக்கு வரும் வகையில், சுற்றுலாவுக்காக இலங்கை வரும் தகுதியுடைய அனைத்து பயணிகளும் வருகைக்கு முன்னர் மின்னணு பயண அனுமதியை (ETA) கண்டிப்பாக பெற வேண்டும்.

ஜப்பான் உட்பட தகுதியுடைய 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு 30 நாட்களுக்கான இலவச சுற்றுலா ETA வழங்கப்பட்டாலும், முன்னதாகவே இணையவழி (ஆன்லைன்) மூலமாக ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். 

அதிகாரப்பூர்வ ETA இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கவும்:

https://eta.gov.lk/slvisa/

1 / 2

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය, ජපානය

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம், ஜப்பான்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka, Japan

Embassy Flag

இலங்கைத் தூதரகம் ஜப்பானிலுள்ள ‘டைனர்ஸ் கிளப்’ உறுப்பினர்களிடையே இலங்கைச் சுற்றுலாவைப் பரப்புகிறது

இலங்கைத் தூதரகம் ஜப்பானிலுள்ள ‘டைனர்ஸ் கிளப்’ உறுப்பினர்களிடையே இலங்கைச் சுற்றுலாவைப் பரப்புகிறது

ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், 2026 செப்டம்பர் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'டைனர்ஸ் கிளப்' (Diners Club) உறுப்பினர்களுக்காக சிறப்புச் சுற்றுலாப் பிரச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் இலங்கையின் பல்லவகைப்பட்ட சுற்றுலா ஈர்ப்புக்கள், செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் உலகப் புகழ்பெற்ற சிலோன் தேயிலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.

ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, வருகை தந்த விருந்தினர்களை அன்புடன் வரவேற்றதுடன், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, தீவின் இயற்கை அழகு, கலாச்சார பாரம்பரியம், உணவு வகைகள் மற்றும் புகழ்பெற்ற விருந்தோம்பல் ஆகியவற்றை அனுபவிக்க இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஊக்கப்படுத்தினார்.

உயர்நிலைச் சேவைகள், பயணம் மற்றும் உணவக அனுபவங்களை மையமாகக் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டண அட்டைக் முத்திரையான 'டைனர்ஸ் கிளப்', ஜப்பானிலுள்ள தனது உறுப்பினர்களுக்கு இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பைத் தூதரகத்திற்கு வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் தூதரகத்தின் முதல் செயலாளர் திரு. சந்துன் சமீரவின் இலங்கையின் சுற்றுலா ஈர்ப்புக்கள் குறித்த விளக்கக்காட்சி, 'சிலோன் டீ மாஸ்டர்கிளாஸ்' மற்றும் தேயிலை சுவைத்தல், செல்வி கனோன் யசுசுகாவின் சிங்களப் பாடல் இசை நிகழ்ச்சி, பாரம்பரிய இலங்கை நடன நிகழ்ச்சிகள் மற்றும் இலங்கையின் புகழ்பெற்ற ஆப்பங்களின் நேரடிச் சமையல் செயல்முறை விளக்கம் ஆகியவை இடம்பெற்றன.

Content image
Content image
Content image
Content image
Content image
Content image
Content image
Content image