இலங்கை தூதுக்குழு JICA உடன் கலந்துரையாடல்
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க ஆகியோர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தெட்சுயா யமாடா மற்றும் JICA இன் மூத்த அதிகாரிகளுடன் 2026 அக்டோபர் 15 அன்று டோக்கியோவில் உள்ள JICA தலைமையகத்தில் கலந்துரையாடல்களை நடத்தியது.
புவியியல் வரைபடமாக்கம், கனிம வள மதிப்பீடு மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகள் ஊடாக இலங்கையின் கனிமத் துறையின் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்து, தொழில்துறை மேம்பாடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு, தொழில்முனைவோர் திறன், கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
