இலங்கை தூதுக்குழு JOGMEC தலைமையுடன் கலந்துரையாடல்
தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க ஆகியோர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு, ஜப்பான் உலோகம் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு அமைப்பின் (JOGMEC) தலைவர் திரு. இச்சிரோ தகஹாரா மற்றும் அதன் மூத்த நிர்வாகிகளுடன் 2026 அக்டோபர் 15 அன்று டோக்கியோவில் கலந்துரையாடல்களை நடத்தியது.
தொழில்நுட்ப ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இலங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட கனிமத் தொழில்களை மேம்படுத்துவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் ஜப்பானிய நிறுவனங்களுடனான ஈடுபாட்டிற்கான வாய்ப்புகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.
