இலங்கைக் கனிமத் துறை மேம்பாட்டு கருத்தரங்கு மற்றும் முதலீட்டாளர் வட்டமேஜை கலந்துரையாடலை, ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து 2026 அக்டோபர் 14 அன்று டோக்கியோவில் உள்ள JETRO தலைமையகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.
இலங்கையின் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி இந்நிகழ்வில் கலந்துகொண்டு முதன்மை உரையாற்றினார். இலங்கையின் கனிமத் துறையில் முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வணிகக் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக, METI, JOGMEC மற்றும் JICA உள்ளிட்ட ஜப்பானிய அரசாங்க முகவர் நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பங்குதாரர்கள் இதில் பங்கேற்றனர்.
இக்கருத்தரங்கில் இலங்கையின் புதிய கனிமக் கொள்கை மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பு, பொருளாதார தொலைநோக்கு, புவியியல் சாத்தியக்கூறுகள் மற்றும் வணிக வாய்ப்புகள் குறித்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. மேலும், விஜயம் செய்துள்ள பத்து இலங்கை நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் வணிகச் செயல்பாடுகளை செய்து, ஜப்பானிய பங்காளிகளுடனான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தின.
இக்கருத்தரங்கு மற்றும் அது தொடர்பான அமர்வுகளில் ஜப்பானிய தரப்பில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு, இலங்கையின் அதிகாரப்பூர்வ தூதுக்குழு மற்றும் இலங்கை தனியார் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். வலையமைப்பு அமர்வுகள் சந்திப்புகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும், சாத்தியமான கூட்டாண்மைகளை ஆராயவும், எதிர்கால ஒத்துழைப்பிற்கான வழிகளைக் கண்டறியவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கின.
இந்நிகழ்வானது இலங்கை-ஜப்பான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் கனிமத் துறையின் நிலையான வளர்ச்சிக்கு பரஸ்பர நன்மையளிக்கும் முதலீடு மற்றும் வணிகக் கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய படியாக அமைந்தது.
