ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு உள்ளடக்க உச்சிமாநாட்டில் தூதுவர் பங்கேற்பு
அக்டோபர் 2 ஆம் திகதி, NAGOMi அமைப்பின் (உலகளாவிய மனித வள ஆதரவுக்கான நகோமி அமைப்பு) தலைவரான திரு. சுடோமு தாகேபே அவர்களின் அழைப்பின் பேரில், ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க "சர்வதேச விளையாட்டு உள்ளடக்க உச்சிமாநாட்டில்" கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், இலங்கை தேசிய பேஸ்பால் அணியின் முக்கிய வீரரும், தற்போது 'சகா ஏசியா டிரீம்ஸ்' அணிக்காக விளையாடி வருபவருமான திரு. அசங்க மற்றும் அவ்வணியின் மேலாளர் திரு. யோஷிஹிட்டோ கட்சுகி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கியூஷு ஏசியா லீக் அமைப்பின் இணை உறுப்பினராக 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சகா ஏசியா டிரீம்ஸ் அணியானது, இலங்கை உட்பட பல்வேறு ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைத்து, சகா மாகாணத்தில் உள்ள உரேஷினோ நகரத்தில் ஒன்றாக வசிக்கவும் பயிற்சி பெறவும் வழிவகை செய்துள்ளது.
இந்த உச்சிமாநாட்டில், ஜப்பான் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் மேலாளரான திரு. தாகேஷி ஒகாடா சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, விளையாட்டின் மூலம் சமூக மறுமலர்ச்சி மற்றும் பன்முகப் பண்பாட்டுச் சகவாழ்வை ஏற்படுத்துவது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்களின் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
