2026 செப்டம்பர் 10 அன்று, ஜப்பான் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சு (METI) மற்றும் NEDO ஆகியவை இணைந்து Makuhari Messe இல் நடத்திய 8ஆவது ஹைட்ரஜன் அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கைத் தூதுவர் பேராசிரியை பிவிதுரு ஜனக் குமாரசிங்க உரையாற்றினார். ஜப்பானிய அரசாங்கம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட முதலீட்டாளர்கள் உட்பட சர்வதேச ஆதரவுடன் ஹைட்ரஜன் துறையை மேம்படுத்த இலங்கை தயாராக உள்ளது என்பதை தூதுவர் வலியுறுத்தியதுடன், இத்துறையின் எதிர்காலம் அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வளர்ந்து வரும் நாடுகளைப் புறக்கணிக்காததாகவும் அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார். இச்சுற்றுமேஜைக் கலந்துரையாடலுக்கு ஜப்பானின் பொருளாதார, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரியோசே அகசவா தலைமை தாங்கினார்.
