2026 செப்டம்பர் 11 அன்று, GRIPS இன் தலைவர் திருமதி ஹிரோகோ ஓடாவிடமிருந்து பட்டதாரிகள் தங்களது முனைவர் மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றுக்கொண்ட GRIPS பட்டமளிப்பு விழாவில் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க கலந்துகொண்டார். பட்டமளித்தவர்களில், ஒரு முனைவர் பட்டம் பெற்றவர் உட்பட, பொதுக் கொள்கை மற்றும் பொது நிதிஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்ற 11 இலங்கையர்களும் அடங்குவர். 2004 ஆம் ஆண்டு GRIPS இல் பொதுக் கொள்கையில் தனது முதுகலை பட்டத்தைப் பெற்றிருந்த தூதுவர், இவ்விழா தனது இனிய நினைவுகளை மீட்டுத் தந்ததாகத் தெரிவித்தார்.
