2026 செப்டம்பர் 3 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், ஹொக்கைடோ ஆளுநர் கௌரவ நவோமிச்சி சுசுகி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல், திறமையான இலங்கைத் தொழிலாளர்களுக்கு சப்போரோவில் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் இலங்கை-ஜப்பான் தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாவிற்கான தயாரிப்புகள் ஆகியவை குறித்து இந்நிகழ்ச்சியில் கவனம் செலுத்தப்பட்டது. ஹொக்கைடோவின் ஒட்டாரு நகரில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதர் திரு. கென் யமஷிதா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
