முக்கிய பயண அறிவிப்பு

2026 ஜூலை 26 முதல் அமலுக்கு வரும் வகையில், சுற்றுலாவுக்காக இலங்கை வரும் தகுதியுடைய அனைத்து பயணிகளும் வருகைக்கு முன்னர் மின்னணு பயண அனுமதியை (ETA) கண்டிப்பாக பெற வேண்டும்.

ஜப்பான் உட்பட தகுதியுடைய 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு 30 நாட்களுக்கான இலவச சுற்றுலா ETA வழங்கப்பட்டாலும், முன்னதாகவே இணையவழி (ஆன்லைன்) மூலமாக ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். 

அதிகாரப்பூர்வ ETA இணையதளத்தின் வழியே விண்ணப்பிக்கவும்:

https://eta.gov.lk/slvisa/

1 / 2

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය, ජපානය

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம், ஜப்பான்

Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka, Japan

Embassy Flag

ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் திரு. தகாஹிரோ நகாதாவைச் சந்தித்தார்.

2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 03 ஆம் திகதி, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், சப்போரோ வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் (Sapporo Chamber of Commerce and Industry) உப தலைவர் திரு. தகாஹிரோ நகாதா மற்றும் அச்சபையின் உறுப்பினர்களை அதன் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். ஹொக்கைடோவின் ஒதாரு நகருக்கான இலங்கையின் கௌரவத் தூதுவர் திரு. கென் யமாஷிதாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார். வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல், திறன்மிகு இலங்கை தொழில்வல்லுநர்களுக்கு சப்போரோ நகரில் உள்ள வேலைவாய்ப்பு சாத்தியக்கூறுகளை ஆராய்தல், மற்றும் ஜனவரி 14–17 வரை நடைபெறவுள்ள 'இலங்கை எக்ஸ்போ' (Sri Lanka Expo) நிகழ்வில் பங்கேற்குமாறு இச்சபையின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.


Content image
Content image