31 ஆகஸ்ட் 2026 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க, கனகவா மாகாண ஆளுநர் கௌரவ குரோய்வா யூஜி அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியிலான உறவுகளை நினைவுகூர்ந்த தூதுவர், இலங்கையிலுள்ள முதலீடு மற்றும் சுற்றுலா வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டியதுடன், இலங்கையுடனான கனகவாவின் தொடர்ச்சியான தொடர்புகளுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
