30 ஜூலை 2026 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியை பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) தலைவர் திரு. கோசல விக்கிரமசிங்க ஆகியோர், SLBFE பிரதிநிதிகளின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தின் போது, தொழிற்பயிற்சி அமைப்பின் (OTIT) தலைவர் திரு. ஓதானி கோடாய் அவர்களைச் சந்தித்து பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தினர். 23 ஜூலை 2026 அன்று கையெழுத்திடப்பட்ட 'பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முறைமைக்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை' (MOC) செயல்படுத்துவது மற்றும் இலங்கையின் மனிதவள மேம்பாட்டில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஜப்பானில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு சரியான பணி மற்றும் வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்வதில் OTIT இன் பங்கு குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
