இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் திரு. கோஷல விக்கிரமசிங்க ஆகியோர் NAGOMi (திறந்த மனப்பான்மை கொண்ட சர்வதேச சமூகங்களுக்கான தேசிய சங்கம்) அமைப்பின் தலைவர் திரு. சுடோமு டகேபே அவர்களை 2026 ஜூலை 28 அன்று சந்தித்து கலந்துரையாடினர்.
வெளிநாட்டு மனித வளங்களின் வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பல்லினக் கலாச்சாரங்களை உள்ளடக்கிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புதல் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இச்சந்திப்பு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. மனிதவள மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது பிரதிநிதிகள் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
