2026 ஆகஸ்ட் 5 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், அணுகுண்டு வீச்சின் நினைவேந்தல் தினத்தைக் குறிக்கும் வகையில் அணுகுண்டு குவிமாடத்திற்கு அருகில் நடைபெற்ற ஹிரோஷிமா உலக அமைதி நிகழ்வில் கலந்துகொண்டார். முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட தூதுவர், நினைவுகூரல், நம்பிக்கை மற்றும் அமைதிக்கான பிரார்த்தனையைக் குறிக்கும் வகையில் முதலாவது 'ககாரி-பி' (kagari-bi - அமைதித் தீ) விளக்கை ஏற்றி வைத்ததுடன், தற்போதைய இலங்கை அரசாங்கம் எப்போதும் அமைதியையும் மனிதநேயத்தையும் ஆதரிக்கிறது என்பதை உறுதிப்படுத்தினார்.
