2026 ஆகஸ்ட் 5 அன்று, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அதிமேதகு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள், ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சின் போது சேதமடைந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி நடைபெற்ற அமைதி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற சான் பிரான்சிஸ்கோ அமைதி மாநாட்டில் இலங்கையின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியதுடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளையும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் வயலின் கலைஞர்களான கனோன் யாசுசுகா மற்றும் ஆய் யோஷிடா மற்றும் பியானோ கலைஞர் மொமோகா ஹசேகாவா (Momoka Hasegawa) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
