ஜப்பான் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்காகத் தனது வாழ்வின் பல ஆண்டுகளை அர்ப்பணித்து, இலங்கைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்புகளை வழங்கிய மறைந்த திரு. நோபுஹைட் யோஷிதா அவர்களுக்குத் தனது ஆழ்ந்த மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஜப்பானின் இலங்கை வணிகக் குழுவினால் (SLBCJ) முதன்மைத் துயரப்பகிர்வாளராக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில், அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு, அவரது இறுதி மரியாதையைச் செலுத்தியதுடன், அவரது குறிப்பிடத்தக்க வாழ்க்கை மற்றும் அர்ப்பணிப்பைப் போற்றினர்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கு பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க அவர்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு விடைபெறல் உரையாற்றியதுடன், திரு. யோஷிதா அவர்களின் தளராத நட்புறவு, பெருந்தன்மை மற்றும் இலங்கைக்கான வாழ்நாள் அர்ப்பணிப்புக்காக இலங்கை மக்களின் இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
